சீனாவில் கொரோனா பரவலை தடுக்க 500 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் உகான் நகரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா தொற்று இன்னும் தொடர்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டன. ஆனால் சீனா, 'ஜீரோ கோவிட் கொள்கை'யை (கொரோனா தொற்று இல்லாத நாடு கொள்கை) பின்பற்றுவதால் இன்னும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் போன்றவற்றை அமல்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அங்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்பியல் பல்கலைக்கழகத்தில் தொற்று வெடித்த நிலையில், அங்கு 488 மாணவர்கள், 19 ஆசிரியர்கள், 5 உதவியாளர்கள் பஸ்கள் மூலம் தனிமைப்படுத்தப்படுதல் மையத்துக்கு அனுப்பிவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மையங்களில் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வார நிலவரப்படி அந்த நாட்டில் 6½ கோடி மக்கள் பொதுமுடக்கத்தில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் அங்கு 1,248 பேருக்கு தொற்று பாதிப்பு (உள்நாட்டு பரவல்) கண்டறியப்பட்டுள்ளது.