Category:
Created:
Updated:
இந்த நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மக்கள் எதிர்பார்த்த எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அலவத்துவல, பிள்ளைகளுக்கு ஒரு வேளை கூட உணவளிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இன்று அநாதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை வங்குரோத்து செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது பைத்தியக்காரத்தனம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.