கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் யாருக்கு?
இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 கரட் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோஹினூரில் எடுக்கப்பட்ட இந்த வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1851-ம் ஆண்டு ராணி விக்டோரியாவிற்காக இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த வைரம் 1937 முதல் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கிறது. அப்போது முதல் இங்கிலாந்து ராணிகள் அரசின் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனிடையே, கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்ட கிரீடம் இங்கிலாந்தின் ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் வசம் இருந்து வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். சார்லஸ் புதிய ராஜாவானதை தொடர்ந்து அவரது மனைவி கமிலா ராணியாகியுள்ளார். இதன் மூலம் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது.