Category:
Created:
Updated:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவோ அல்லது வேறு எவருமோ அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வருவதற்கான நம்பிக்கை தமக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.