Category:
Created:
Updated:
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளது.