சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வடக்க கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை vஎன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெறும் நிலையில், அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுக்கள் ஏதும் முன்னெடுக்கப்பட்டதா அன ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்.இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக்கொண்டவர்கள். ஏற்கனவே 1987ம் ஆண்டில் தமிமீழ விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசுகள் செயற்பட்டுக் கொண்டிருந்ததன் அடிப்படையல், ஓர் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது.உருவாக்கப்பட்ட அந்த டைக்கால நிர்வாகம் எழுத்துருவுடன் முடிவு பெற்றது. காரணம், அந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆசனங்கள், மற்றும் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.டின்.ரி.எல்.எப் ஆகியவற்றிற்கு ஆசனங்கள் எத்தனை அதனைவிட தமிழுழ விடுதலைப்புலிகளிற்கு எத்தனை ஆசனங்கள் என்ற அடிப்படையில் இவ்வாறு இடைக்கால அரசாங்கம்மும்மொழியப்பட்டது.அவ்வாறான இடைக்கால நிர்வாகத்திற்கான தலைவர்களிற்கு மூன்று தலைவர்களின் பெயர் மும்மொழியப்பட்டது. மட்டக்களப்பு மண்ணைச்சேர்ந்த பத்மநாதன் மற்றும் ரமேஸ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி வி கே சிவஞானம் ஆகிய மூவரது பெயர்கள் மும்மொழியப்பட்ட நிலையில், சி வி கே சிவஞானம் அவர்களை ஜே ஆர் ஜெயவர்த்தன தெரிவு செய்ததில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவும், இந்த இடைக்கால நிர்வாகம் இடையில் செயலிழந்து போகவேண்டிய நிலை ஏற்பட்டது.அதன் பின்னர் சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் எல்லைமீறிய அதிகார வரம்பு செயற்பாடுகளால் அந்த சுனாமி கட்டமைப்பும் செயற்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்டபொழுது உலக வங்கியினுடைய ஆதரவு இருந்தது.நிதிகளை கையாள்வதற்கான முறையான கட்டமைப்பு உலக வங்கியின் கண்காணிப்பில் இருந்தது. அதற்கு முன்னர் இந்தியாவின் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம் இந்தியாவின் மேற்பார்வையுடன் உருவாக்கப்பட்டது.தற்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடைக்கால நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து, அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பது தொடர்பில் பத்திரிகைகளில் பார்க்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் கடந்த 5ம் மாதமே பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துரையாடியிருந்தோம்.கடந்த 3ம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டத்தில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பரிந்துரை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன். அது தொட்பில் பரிசீலிக்கலாம் என்ற செய்தி அங்கு சொல்லப்பட்டிருந்தது.இப்பொழுது, தன்னால் எதுவும் செய்ய முடியாது, தன்னுடைய இயலுமையை இழந்துகொண்டு செல்கின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தான் இருப்பதாகவுமு, அக்கறை செலுத்துபவனாகவும் காட்டிக்கொள்வதற்காக அவர் இடைக்கால நிர்வாகம் பற்றி பேசுகின்றார்.ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்படுகின்றபொழுது, மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமானது, இடைக்கால நிர்வாகம் தொடர்பில் கருத்துக்கள் ஏன் உருவாகுகின்றது என்றால், புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற டயலஸ்போறா தமிழர்களுடைய முதலீடுகளை உள்ளுக்குள் கொண்டு வருவதுதான் மிக முக்கியமான நோக்கமாக இருக்கின்றது.பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களுடைய பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு, தற்காலிகமாக ஓர் இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்கினால், அதிலும் வடக்கு கிழக்கு இணைந்ததாக உருவாக்கப்பட்டு அதனை உலக வங்கி அல்லது ஐ எம் எப் அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய நேரடி நெறிப்படுத்தலில் நிதிக்கையாளுகைகள் உருவாக்கப்பட வேண்டும்.இப்பொழுது இருக்கின்ற நடைமுறைகள் புாலவே, மத்திய அரசினுடைய திரைசேரிக்கூடாகத்தான் நிதியை பெற்று, வடக்கு கிழக்கிலே இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதென்றால், அது நடக்கக்கூடிய காரியமுமல்ல, அதுவொரு வீண்விரயமான காலமாகவும் மாறும்.சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டபொழுது எவ்வாறு உலக வங்கி நிதி கண்காணிப்பை மேற்கொண்டதோ, 1987ம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டபொழுது இந்தியா எவ்வாறானதொரு பொறுப்பை எடுத்துக்கொண்டதோ, அதேபோல இப்பொழுதும் வடக்கு கிழக்கு இணைந்த, இரண்டையும் இணைப்பாக மேற்கொள்கின்ற இடைக்கால நிர்வாகத்தை வடக்கு கிழக்கிற்கான பொருளாதார அபிவிருத்திக்காகவும், மக்களுடைய இயல்பு வாழ்க்கை்காகவும் உருவாக்கப்படுகின்றபொழுது, இந்தியா பொறுப்பெற்க வேண்டும்.இந்தியாவினுடைய பங்களிப்பில்லாமல் அதனை கையாள முடியாது. அது நடக்கக்கூடிய காரியமுமல்ல. அதேநேரம், பலம்வாய்ந்த நிதி அமைப்பு ஒன்றின் ஊடாக நிதிப்பொறுப்பு கையளிக்கப்பட்டு, அதன் ஊடாக வடக்கு கிழக்கில் தேங்கிப்புாயுற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வரும் டொலரை இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை தரும் வகையிலே கொண்டெடுக்கக்கூடியதாக இருக்கும்.அதற்கு ரணில் விக்ரமசிங்க உடன்படுவாரானால், அவர் அந்த நல்லெண்ணமும் சிந்தனையும் கொண்டிருந்தால், ஏனென்றால், ரணில்விக்ரமசிங்க இருந்தபொழுதுதான் சிரான் பணியகம் உருவாக்கப்பட்டது. அதனைத்தான் சந்திரிக்கா அம்மையார் கலைத்திருந்தார். இந்த இடைக்கால நிர்வாகத்தின் நன்மைகள் பலருக்கும் தெரியும்.உலகநாடுகளிடம் சென்று கூட்டம் வைத்து, விடுதலைப்புலிகள் காலத்திலேயே எவ்வாறு பணங்களை சேகரிக்கலாம் என்ற தந்துரோபாயம் ரணிலிற்கு தெரிந்ததாக இருந்தது. இப்பொழுதும் அவர் அதே தந்துரோபாயத்தை டயஸ் போரா அமைப்புக்களை வைத்துக்கொண்டு, அதாவது, தான் தடை நீக்கிய அமைப்புக்கள் ஊடாக நிதியை உள்ளீர்க்கின்ற ஓர் நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருக்கின்றார்.அவர் சொல்வது இதைய சுத்தியானதும், நேர்மையானதுமான இருந்தால், இடைக்கால நிர்வாகமானது தமிழர் தரப்பிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழர்கள் அதனை நேர்மையான வழியில் செய்வதற்கு இந்தியாவின் நேரடி நெறிப்படுத்தலும், உலக நிதி நிறுவனத்தின் பாதுகாப்பும் அதற்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது இந்த இடைக்கால நிர்வாகம் இயங்க முடியாது என்பது, காலம் தந்த நிதர்சன உண்மையாகும்.இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தீர்களா என ஊடகவியலாளர் இதன்போது வினவினார்,அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்,எமது கட்டசியை சேர்நதவர்களிற்கு அவ்வாறான அமைப்பக்களுடன் உத்தியுாகபூர்வமற்ற சந்திப்புக்கள், தொடர்புகள் இருக்கின்றனர். அதனை நான் நிராகரிக்கவில்லை. எங்களுடனும்சிலர் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இந்த தடைகள் நீக்கப்பட்ட பிற்பாடு, இதுவரை அவ்வாறான அமைப்புக்களுடன் உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் எவையும் இடம்பெற்றதாக எனக்க தெரியவில்லை. எமது கட்சியில், நான் அறியாது யாரும் அவர்களுடன் பேசியிருந்தால் அது தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனாலும், கட்சி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மையானது என தெரிவித்தார்.முதலீட்டுகள் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தில் முன்னுற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் அல்லது மும்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என அவரிடம் வினவியபோது,ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்காலை, காங்கேசன்துறை செீமெந்து தொழிற்காலை உள்ளிட்ட பல்வேறு திட்ட மும்மொழிவுகள் கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. அதற்கு கடந்த காலங்களில் இருந்த எந்தவொரு அரசும் செவி சாய்க்காது கிடப்பில் போட்டுள்ளமை தொடர்பிலும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்

  • 377
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads