ஒவ்வொருவரும் தாம் கல்வி கற்ற பாடசாலைகளில் நன்றி உணர்வுகளை காட்டுகின்ற போது எதிர்வரும் சந்ததி அதன் வழி நடக்கும் என யாழ் ஊர்காற்துறை நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் கஜநிதி பாலன் தெரிவித்துள்ளார்
முருகானந்தா கல்லூரியில் 1996 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரம் கற்ற பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் ஓய்வு நிலை அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் நேற்று(20-08-2022) கிளி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் கஜநிதி பாலன் முதன்மை விருந்தினர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதாவது இன்றைய சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடத்திலும் உள்ளது. குறிப்பாக1996ம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர்கள் இணைந்து இன்று கௌரவத்தை வழங்கியுள்ளார்கள் எனது பாடசாலைக்காலத்தில் ஆசிரியர்கள் மீது இருந்த பயமும் பற்றும் இன்றும் எங்கள் இடத்தில் இருக்கின்றது.
இவ்வாறு ஒவ்வொருவரும் தாங்கள் கற்ற பாடசாலைகளில் நன்றி உணர்வுகளை காட்டுகின்ற போது எதிர்வரும் சந்ததியும் அதன் வழி நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முருகானந்தா ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு நிலை ஆசிரியர்கள் அதிபர்கள் வான்ட் வாத்திய இசையுடன் 1996இல் கா.பொ.த சாதாரணதர கல்வி கற்ற மாணவர்களால் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்த அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.