சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது - நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். கோட்டா கோ கம போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய இருக்கிறது. இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது. இந்த கொடூரமான சட்டம் மூலம் தமிழர்கள் 30 வருடங்களுக்கு மேலாக துன்புறுத்தப்படுகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் தொடர் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த தடைச் சட்டத்தால் வருடக்கணக்கில் எம்மவர்கள் விசாரணை இன்றி சிறையில் இருக்கிறார்கள்.இப்போது இலங்கையின் அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள் காரணம் செப்டம்பர் மாதத்தில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாக இருக்கின்றது இந்த கூட்டத்தொடரை சமாளிப்பதற்கு தாம் வடக்கிற்கும் வந்து அபிவிருத்தி வேலைகளை செய்கிறோம் என காட்ட இலங்கை அரசு முயல்கிறது இலங்கை அரசின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.இந்த நாடு பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போயிருக்கிறது எதிர் வரும் மாதங்களில் நிலை இன்னும் மோசமடையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இந்த நிலையை ரணில் விக்கிரமசிங்க மாற்றவேண்டும் என்றால் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயலவேண்டும். விவசாயத்திற்கு தேவையான எரிபொருளையும் வழங்கினாலே எமது மக்கள் தமக்குத் தேவையான உணவினைப் பெற்றுக் கொள்வதோடு இந்த நாட்டிற்கே வழங்குவார்கள் எரிபொருள் இன்மை காரணமாக கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள் பஞ்சத்தை போக்க ரணில் விக்கிரமசிங்க விரும்பினால் எரிபொருள் மற்றும் உரத்தையும் வழங்கவேண்டும். மக்களிடம் நாம் வினயமாக கேட்கிறோம் நீங்களும் சுயமாக வீடுகளில் வீட்டுத் தோட்டம் செய்யுங்கள் எமது சுய பொருளாதாரத்தை நாமும் கட்டியெழுப்ப வேண்டும் பட்டினியால் உயிர் போகாத நிலையை நாம் உருவாக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயன் முன்னாள் அதிபர்கள் கிளிநொச்சி சேவைச்சந்தையின் தலைவர் மற்றும் செயலாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

  • 246
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads