Category:
Created:
Updated:
இந்தியாவின் முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்து தெற்கு மும்பையில் உள்ள பி சென்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி இந்த பேருந்தை தெற்கு மும்பையில் உள்ள பி சென்டரில் அறிமுகப்படுத்தி வைத்தார். "மும்பையில் இன்று அசோக் லேலண்ட் நிறுவன எலக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- "இது நிலையான போக்குவரத்து துறைக்கு மாறும் ஊக்கத்தை அளிக்கிறது. இத்தகைய முயற்சிகள் செலவு குறைந்த தீர்வுகள் ஆகும்.
இதன் மூலம், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு வளங்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரதம் என்ற இலக்கை அடையலாம்" என்று தெரிவித்தார்