டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து 7.14 மணிக்கு புறப்பட்ட மோடி, 7.18 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்தார். அங்கு, முப்படை வீரர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.
இதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுகொண்டார். இதையடுத்து இந்தியாவின் பிரதமராக 9வது முறையாக செங்கோட்டையை தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.