Category:
Created:
Updated:
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னால் தலைவருமான ஜகத் சமந்த உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்ட நீதிபதி நவீன் இந்திரஜித் புத்ததாஸவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.