தாய்க்காக உருகும் மோடி
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி தனது தாயாரின் 100வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தது சமீபத்தில் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமரின் தயார் ஹிராபா மோடி இன்று (18 ஆம் தேதி) தனது 100வது பிறந்தநாளை காண்கிறார். அவரது 100வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது குடும்பத்தினர் தயாராகி உள்ளனர்.
இதனிடையே இன்று குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி தனது தாயாரின் 100வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார். காந்தி நகரில் உள்ள தயார் ஹீராபென் இல்லத்தில் அவரை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
அதோடு தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், அம்மா…இது வெறும் வார்த்தையல்ல, ஆனால் பலவிதமான உணர்ச்சிகளைப் படம் பிடிக்கிறது. இன்று ஜூன் 18 என் அன்னை ஹீராபா தனது 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். இந்த சிறப்பு நாளில், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சில எண்ணங்களை எழுதியுள்ளேன் என தனது தாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.