Category:
Created:
Updated:
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் ஜூன் 20 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், ஜூன் 20 முதல் உயர் நீதிமன்ற கிளைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார்.