அக்னிபாத் திட்டம் ஆபத்தானது- ப.சிதம்பரம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இத்திட்டம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:- அக்னிபாத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது. இத்திட்டம் ராணுவ பயிற்சியை கேலி செய்வதாக தோன்றுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க ஊக்கம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த திட்டத்தை கைவிடவேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.