Category:
Created:
Updated:
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியதை அடுத்து முதித பீரிஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது , சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 200 ரூபாயினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோவின் விலை லாப் நிறுவனத்தின் விலையை போல அதிகரிக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் அந்த நிறுவனம் விலையை மிகவும் ஆபத்தான விதத்தில் அதிகரித்தது போல நாங்கள் அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.