Category:
Created:
Updated:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது கேட்டுக் கொண்டார்.