Category:
Created:
Updated:
இங்கிலாந்தில் மாணவர் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி வீதம் கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபஸ்கல் ஸ்டடீஸ் (ஐ.எஃப்.எஸ்.) படி, இலையுதிர்காலத்தில் அதிகபட்ச வீதம் 12 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பட்டதாரிகளுக்கு மன அமைதியை வழங்குவதற்காக உச்சவரம்பு 7.3 சதவீதமாக குறைக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் மைக்கேல் டோனெலன் கூறினார்.
இதனிடையே, வட்டி வரம்பு இன்னும் கொடூரமாக அதிகமாக உள்ளதாக தேசிய மாணவர் சங்கம் குற்றங்சாட்டியுள்ளது.
ஐ.எஃப்.எஸ். இந்த அறிவிப்பை வரவேற்றது. ஆனால், இது பெரும்பாலான பட்டதாரிகளின் திருப்பிச் செலுத்துவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.