Category:
Created:
Updated:
நாட்டிற்கு மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த எரிவாயு தொகையை தரையிறக்குவதற்கு முன்னர் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிவாயு தொகை எதிர்வரும் 6 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.