நடுக்கடலில் நடந்த அந்தப் படுகொலையை என்றுமே மறக்கமுடியாது என்பதுடன்; அந்த படுகொலை இன்றைக்கு நடந்தேறி முப்பத்தி ஏழு ஆண்டுகள் கடந்தும் இன்னும் தான் நீதி கிடைக்கவில்லை
இலங்கையின் வடக்கே உள்ள சப்பத தீவுகளில் மிகத் தொலைவில் பண்பாட்டு அடையாளங்களையும் பாரம் பரியங்களையும் கொண்டு காணப்பபடும் நெடுந்தீவிலிருந்து தமது அன்றாடத் தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு சுமார் ஒருமணிநேரத்துக்கும் கூடுதலான நேரம் ஆழமறியா கடலில் ஆபத்தான கடல் பயணம் செய்து தமது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி; காலை மருத்துவ தேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குமாக நெடுந்தீவு மாவிலித் துறையிலிருந்து குழந்தைகள் முதியவர்கள் என 64 இற்கும்மேற்பட்ட பயணிகளுடன் குறிகாட்டுவான் நோக்கி பயணித்த குமுதினி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கூரிய ஆயுதங்களால் குத்தியும் வெட்டியும் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலை நடந்தேறி 37 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் இதற்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பதுடன் இந்த மக்களின் போக்குவரத்துக்கு இன்னமும் தீர்களும் இல்லை இந்த குமுதினி படகும் பழுதடைந்து நீண்ட காலம் நெடுந்தீவு மாவிலித் துறையிலும் இப்போது குறிகாட்டுவானிலும் என பல மாதங்களாக கட்டப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் குமுதினி படகு 1960 களில்; நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவேயாகும். இந்தப்படகானது இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.காலத்திற்கு காலம் வடதாரகை நெடுந்தாரகை பலநோக்கு கூட்டுறவு சங்க படகு மற்றும் தனியார் படகுகள் என பல்வேறு பட்ட படகுகள் போக்கு வரத்துக்கு இருந்தாலும் குமுதினி படகே பொருத்தமான படகு என்றும் இது போன்ற வடிவமைப்பை கொண்ட படகுகளே பொருத்தமானது என்ற கருத்தையே பலரும் முன்வைத்து வருகின்றனர்.