சினிமா செய்திகள்
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 130 வது ஜனன தின நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி - உப்போடையில்  அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 130 வது ஜனன தின நிகழ்வு இன்று (03-05-2022) நடைபெற்றுள்ளது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்து இன்றுடன் 130 வருடங்கள் ஆகின்றன, 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.

சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத பல செயற்பாடுகளை தனது முயற்சியால் சாதித்து காட்டிய மகான் சுவாமி விபுலானந்த அடிகளார். கல்வி, சமயம் மற்றும் சமூகப்பணிகளில் சுயநலம் இன்றி தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.

மட்டக்களப்பு கல்லடி - உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும்.

தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார்.

கிழக்கிலங்கையில் அவதரித்து உலகின் முதல் தமிழ் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் ஆளுமையைப் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எமது சமூகம் மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கியபோது அதனை மீட்டெடுத்து நெறிப்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர். பல ஏழைகளின் வாழ்வில் கல்வி எனும் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கம் அவர்.அடிகளாரது ஜனன தினம் இன்று (03-05-2022) கல்லடி - உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் அனுட்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் உதவி பொறுப்பாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் இராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதியில் மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, ஜனனதின நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • 495
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads