ஊரடங்கை மேலும் நீட்டித்தது சீனா
ஊரடங்குக்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தலைநகர் பெய்ஜிங் நகரிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனைகளை முடுக்கிவிடவும் பெய்ஜிங் நகர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் நிதி தலைநகரான ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாளில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.