Ads
சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து
ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று இன்று (ஏப்.24) மாலை 4.25 மணிக்கு வந்தது. இது கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய ரயில். இந்த ரயிலானது சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பிரேக் பிடிக்காத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த ரயில் வேகமாக சென்று ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையின் சுவற்றில் மோதி நின்றதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிரண்டு கடைகள் லேசாக சேதமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads