
கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அமைச்சர் நசீர் அஹமட்
அண்மையில் சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நசீர் அஹமட் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டார்.
அதன்படி நேற்று கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் சபையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நசீர் அஹமட் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதேவேளை, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது..
அவர் விவசாய இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.