
50 வீடுகள் தீயினா சாம்பல் - 9 குழந்தைகள் உடல் கருகி பலி
இரவு நேரத்தில் ஒரு குடிசை வீட்டில் திடீரென்று ஏற்பட்ட அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவ 50 வீடுகள் எரிந்து சாம்பலாகின. 160 கால்நடைகள் உயிரிழந்தன. ஒன்பது குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
சிந்து மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு குடிசையில் தீப்பற்றி இருக்கிறது. காற்று பலமாக வீசியதால் அந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதனால் அங்கு அத்தனை வீடுகளும் ஒரே நேரத்தில் தீ பரவி இருக்கின்றன. இந்த தீ விபத்தில் மொத்தம் 50 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகியிருக்கின்றன. 9 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 160 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன.
ஒன்பது குழந்தைகள் உடல் கருகி உயிர் இழந்திருக்கும் நிலையில், காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போன் செய்தும் உடனடியாக தீயணைப்பு படையினர் வரவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா உத்தரவிட்டிருக்கிறார் .