கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 23ம் கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் தலா இரண்டு கோடி ரூபா. காசு பிணையில் செல்லுமாறு நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 23ம் திகதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களும் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்களும் என 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.இதில் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய மீனவர்களையும் அவர்களின் படகு ஒன்றினையும் கைது செய்த கடற்படையினர் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட தையடுத்து குறித்த 12 இந்திய மீனவர்களும் கடந்த24ம் திகதி மாலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்று(07-04-2022) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இன்றைய தினம் (07-04 -2022) மேற்படி 12 இந்திய மீனவர்கள் தொடர்பிலான வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் பி.ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப் பட்டது குறித்த மீனவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 12 இந்திய மீனவர்களையும் தலா இரண்டு கோடி ரூபா பெறுமதியான காசுப்பிணையில் செல்லுமாறு மன்று கட்டளை இட்டுள்ளதுடன் எதிர்வரும் மே மாதம் 12 ம் வழக்கு தவணையிடப்பட்டுள்ளதுஇதே நேரம் வழமை போன்று இன்றைய தினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.