சிறுவர் மற்றும் இளையோர்களை பாதுகாப்பதில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முயற்சிகள்
யாழ்ப்பாண மாவட்ட செயலக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து சிறுவர் மற்றும் இளையோர்களை பாதுகாப்பதில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (06-04-2022) மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மேலும், இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட பயிற்சி பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்துள்ளார். அத்தோடு அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது "எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதோடு, பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்புமுயற்சிகளில் ஈடுபடவேண்டியுள்ளது.
அத்தோடு போதைப்பொருள் பாவனைக்குள்ளானவர்களை அதிலிருந்து பாதுகாத்தல், கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளுதல், அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், குடும்பம் மற்றும் சமூகத்தோடு இணைத்தல் வேண்டும். மேலும் தனிமனித முயற்சியினால் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த முடியாது அனைவரும் இணைந்தே இதனை கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.55மேலும், இக் கலந்துரையாடலில் செயற்பாட்டு முன்னேற்ற ஆண்டறிக்கை, தற்போதைய செயற்பாடுகள், தடுப்பு முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடலில் போது உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், அருட்தந்தை வின்சன் பற்றிக், Dr. வினோஜா, Dr.சிவன் சுதன், Dr.நிர்மல் மற்றும் மாகாண ஆலோசகர், அருட்சகோதரிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.