தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் மதிப்பிலான களைக்கொல்லி பூச்சிமருந்து க்யூ பிரிவு போலீசார் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் போலீசார் அவற்றை சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் க்யூ பிரிவு போலீசார் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு வள்ளத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து முட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை கண்டு அவர்களை சுற்றி வளைக்க முற்பட்டபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.தொடர்ந்து அங்கு இருந்த சரக்கு வாகனம் மற்றும் வளத்தை ஆய்வு செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான களைக்கொல்லி பூச்சிமருந்து சுமார் 700 லிட்டர் இருப்பதை கண்ட கியூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய, இருப்பதைக் கண்ட கியூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் வள்ளம் ஆகியவற்றை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அவர்களை வலைவீசி தேடி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.