கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் நாளை (18-03-2022) நடைபெறவுள்ள வருடாந்த பொங்கலுக்கான பண்டமெடுத்து வரும் நிகழ்வு இன்று (17-03-2022) பிற்பகல் மீசாலை புத்தூர் சந்திப ண்டமரவடியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா நாளை வெள்ளிக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற உள்ளது.
ஆலயத்திற்கான பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை(11-03-2022) பகல் கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விளக்கு வைத்தல் பூசையினையடுத்து பிரம்பு வழங்கும் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்று யாழ்; மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியிலிருந்து பண்டமெடுப்பதற்கு மாட்டு வண்டிகளில் சென்ற பக்தர்கள் இன்றைய தினம் யாழ் மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடி நாகதம்பிரான் ஆலயதில் இருந்து புளியம்பொக்கணையில் நாளை நடைபெற உள்ள பொங்கலுக்கான பண்டங்களை எடுத்து வருகின்ற வைபவம் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று மதியம் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிற்பகல் 3-30 மணிக்கு பண்டமரவடியில் இருந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கான பொங்கல் பண்டங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று புத்தூர் சந்தியில் இருந்து புறப்பட்ட இந்த பண்ட வண்டில்கள் ஏ-09 வழியாக இன்றிரவு(17-03-2022) கிளிநொச்சி பரந்தன் சந்தியை வந்தடைந்து நாளை(18-03-2022) காலை ஏ-35 வழியாக கண்டாவளைக்குச் சென்று இரவு புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினைச் சென்றடைந்து அங்கு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.