சினிமா செய்திகள்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் என நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன்

கூட்டுறவு சமஸ்டியே பொருத்தம் எனவும், பொது சன வாக்கெடுப்பு நடார்த்த வேண்டும் எனவும் இந்தியா கூறும் நிலையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் என நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார்.தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்திருப்பதனால் உலகில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு எம்மையும் பாதித்திருக்கின்றது. சிறிய நாடான உக்ரைன் ரஸ்யாவை சவாலாக எதிர்கொண்டது. இந்த நிலையிலும் ரஸ்யா உக்ரைனின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் முழுமையாக பிடித்துவிடலாம்.ஆனால் அமெரிக்காவின் நேட்டோ படைகளும் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றது. இதேவேளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாமீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஸ்யாவுடன் வியாபாரமே செய்யக்கூடாது என அமெரிக்கா கேட்கின்றது.கேட்டு பொறுமையாக இருந்த இந்தியா நேற்றைய தினம் ரஸ்யாவுடன் அமெரிக்காவை எதிர்த்து வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டனர். டொலர்களை பயன்படுத்தி அல்ல. இந்திய ரூபாய்களை கொடுத்த ரஸ்யாவின் பொருட்களை வாங்குவதுடன், ரஸ்ய நாணயத்தின் ஊடாக இந்திய பொருட்களை வாங்குகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை சாட தொடங்கியுள்ளது. சீனாவில் உள்ள பத்திரிகை ஒன்று வழமையாக இந்தியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்துள்ள நிலையில், நேற்று இந்தியாவிற்கு சார்பாக எழுதியுள்ளது. பனிப்போர் என்ற நிலைமைகள் இப்பொழுது மாறி 3ம் உலக யுத்தம் தொடங்குவது போன்றதான நிலையில் அரசியல் சரித்திரங்கள் மாறியுள்ளது.அமெரிக்கா எப்படி போனாலும் நாங்கள் இந்தியாவுடனேயே நிற்க வேண்டும். இந்தியாவை நாங்கள் பகைத்தால் ஆணிவேரையும் இழந்து போய்விடுவோம் எனற கடந்தகால அனுபவங்களையும் விளங்கிக்கொள்ள வேண்டும். கடந்த கால அனுபவங்களைக்கொண்டு நாங்கள் நிதானமாக செயற்பட வே்ணடும்.நாங்கள் அமெரிக்காவுடனும் பேசவேண்டும். மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கொண்டு வந்ததெல்லாம் அமெரிக்காதான். ஆனாலும் எந்தவித எதிர்மனப்பாங்கில்லாமலும் நாங்கள் நிக்கின்றோம்.அமெரிக்காவுடன் பேசுவதற்கு மூவர் சென்றிருந்தார்கள். நீங்கள் அறிவீர்கள். உடனடியாக 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கேரி அதனை இந்தியாவரை கொண்டு சென்று கொடுத்தார்கள். அதனை யார் செய்தது? பக்கத்து நாடுதான் செய்தது. ஏன் நீ அமெரிக்காவுக்கு சென்றீர்கள் என்பதற்காகவே அதனை செய்தார்கள்.இன்று நாங்கள் சிதறிப்போனோம். மக்களிடமும் சிதறிப்போனோம். 13ம் திருத்தம் நடைமுறையில் உள்ளதுதான என சொல்லப்படுகின்றது. சுமந்திரனும் விளக்கம் சொல்கின்றார். கூட்டுறவு சமஸ்டிதான் உங்களிற்கு பொருத்தம் என மோடி சொல்கின்றார். புலம்பெயர்ந்து இருப்பவர்களிடமும், இங்கிருப்பவர்களிடமும் பொது சன வாக்கெடுப்பு நடார்த்த வேண்டும் என ஸ்டாலின் சொல்கின்றார்.ஆனால் நாங்கள் 13ஐ நடைமுறைப்படுத்தினால் காணும் என கேட்கின்றோம். இதெல்லாம் அரசியலில் மாறி மாறி வருகின்றது. இந்த களச் சூழல்களை நாங்கள்  நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒருவரோடு முட்டுப்படும்போது மற்றவர் எதிரான மாற்றங்களை கொண்டு வருகின்றார் எனவும் குறித்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்தார்.

  • 709
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads