சினிமா செய்திகள்
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

ஒரு லட்சம் என எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை கேள்வி எழுப்பிய சங்கத்தின் தலைவி

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது? என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று எங்களுடைய போராட்டம் 5 வருடங்களையும் கடந்து வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு லட்சம் ரூபா வாழ்வாதாரமும், மரணச்சான்றிதழும் மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களிற்கு காணாமல் போனோர் சான்றிதழ் வழங்குவதாகவும் நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.எங்களது உறவுகள் கிடைக்கும்வரை போராடிவரும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கவே இந்த தீர்வை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்து உணவின்றி மக்கள் உயிரிழக்கும் வேளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு ஒரு லட்சம் ரூபா வாழ்வாதாரம் வழங்க முன்வந்திருக்கின்றார்.இந்தவேளையில் அவர் இவ்வாறான வாழ்வாதாரத்தை கொடுக்க முன்வந்திருப்பது தொடர்பில் எமக்கு விளங்கவில்லை. எமது போராட்டத்தை மழுங்களிடிக்கவே இவ்வாறு உதவ முன்வந்துள்ளதாக நாங்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகள் இவர்களது ஒரு லட்சம் ரூபாவை வாங்குவதற்கும், மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை.இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும். இவர்களால் தரமுடியாது போனால் சர்வதேசம் எமது உறவுகளை கண்டுபிடித்து தர வேண்டும்.எங்களுடைய உறவுகளைத்தேடி 5 வருடங்கள் முடிவடைந்துள்ள காலத்தில் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். எங்களுடைய உறவுகளைத் தேடி மழை, வெயில், பனி என்று பாராது எத்தனையோ தாய்மார் இறந்தும் எமது போராட்டத்தை நாங்கள் கைவிடவில்லை.இதுவரை காலமும் நமது நோய்களிற்காக சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பெறுமதிகூட இந்த ஒருலட்சத்தை ஈடு செய்யாது. இந்த நிலையில் இவர்கள் ஏன் இந்த ஒரு லட்சத்தை தர நிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு எங்களுடைய உறவுகள்தான் வேண்டும். இவர்களிடம் பொருட்களை கொடுக்கவில்லை. இவர்களிடம் எமது பிள்ளைகளான உயிர்களையே ஒப்படைத்தோம்.இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்திடம் தான் எமது உறவுகளை ஒப்படைத்தோம். அவர்கள் இன்று வரைக்கும் எவ்விதமான முடிவையும் தரவில்லை. எமக்கு எமது உறவுகளைத்தான் மீட்டுத்தரவேண்டுமேயன்றி இழப்பீடுகளோ, மரண்சான்றிதழ்களோ தேவையில்லை..எமது உறவுகளை கையளித்து 12 ஆண்டுகள் முடிவடைகின்றது. 2009ம் ஆண்டு எமது பிள்ளைகளை ஓமந்தையிலு்ம, வட்டுவாகலிலும் அவர்களது கரங்களில் உயிருடன்தான் ஒப்படைத்தோம். 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து, அவரை படிப்பித்து எம்மை பார்க்க வே்ணடும் என்ற இந்த நேரத்தில் இன்று பிள்ளையை இழந்து நிக்கின்றேன்.ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

  • 594
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads