கிளிநொச்சி பூநகரி பாலை தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருத்தல யாத்திரை கலந்துரையாடல்
கிளிநொச்சி பூநகரி பாலை தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருத்தல யாத்திரை தொடர்பான கலந்துரையாடல் இன்று (14-03-2022) கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த திருத்தல யாத்திரை தொடர்பான கலந்துரையாடல் இன்று( 14-03-2022)பிற்பகல் 2 மணிக்கு பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கடற்படையினர் கிளிநொச்சி மறைக் கோட்ட குருமுதல்வர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் துறைசார் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெற உள்ள இந்த நிலையில் பெருமளவான யாத்திரிகர்கள் கலந்து கொள்வதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் குடிநீர் வசதி போக்கு வரத்து வசதி மருத்துவ வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேற்படி கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.