
உக்ரைன் தலைநகர் அருகே ரஷிய படைகள் குண்டு மழை
உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே தங்களின் இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா இப்படி ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. 17-வது நாளாக உக்ரைனின் இந்த அதிரடி தாக்குதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை சுற்றிவளைத்துள்ள உக்ரைன் படைகள் அங்கு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள மசூதி ஒன்றில் உள்ளூர் மக்கள் 80க்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மசூதி மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மசூதி மீது நடத்தபட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
தலைநகர் கீவ்வையும் ரஷிய படைகள் நெருங்கியுள்ளன. கீவ் நகரில் வான் வழி தாக்குதலுக்கான சைரன்களும், பீரங்கி தாக்குதல்களும் நீடிப்பதால், மக்கள் பாதுகாப்பாக இடங்களை நோக்கி ஓடுகின்றனர். கீவ் நகரை சுற்றி பல்வேறு இடங்களில் சண்டை நடைபெற்று வருகிறது.