Category:
Created:
Updated:
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பெருமளவானோர் எரிவாயு பெற்றுக் கொள்ள முடியாது திரும்பிச்சென்றதை அவதானிக்க முடிந்தது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் பல்வேறு தொழில் முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக அதிகளவான உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன அத்துடன் பேக்கரிகள் பல மூடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் இன்றைய(10-03-2022) தினம் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதில் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருந்தன ஏனைய மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்