Category:
Created:
Updated:
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர்.
இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது.
அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியிலே நீராடிக் கொண்டிருந்தபோது மின்சார விபத்து ஏற்பட்டு மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் ஓடிச் சென்ற நிலையில் இவருக்கும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.