Category:
Created:
Updated:
உக்ரைன் மீது ரஷியா 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் மார்ச் 8-ம் தேதி அதிகாலை வரை 474 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.