Category:
Created:
Updated:
எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நேற்று (08) காலை நடைபெற்ற 2022 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இவ்வருட சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்வு இடம்பெற்றது.
துணிச்சலான பெண்களைப் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை பிரதமர் பார்வையிட்டார்.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப 10 சர்வதேச மொழிகளை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.