Category:
Created:
Updated:
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். அவர்கள் நால்வரும் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களாவர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களாவர். அவர்களுள் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.