
உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் தாமதம் ஏன்? - மம்தா
உக்ரைன்- ரஷியாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களின் உயிரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. அவர்களை அழைத்து வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது? ஏன் முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
மாணவர்கள் உள்பட இந்தியர்களை அழைத்துவர உடனடியாக போதுமான எண்ணிக்கையிலான விமானங்களை ஏற்பாடு செய்து, அனைத்து மாணவர்களையும் விரைவில் அழைத்து வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.