Category:
Created:
Updated:
1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த குழு நியமிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தின் போது குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாரியளவில் நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றமை போன்ற நிதி மோசடிகள் மேலும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு இந்த விதிகளை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.