சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

எரிபொருள் தட்டுப்பாடு என்பது கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன்

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்றைய நாட்களில் மிக முக்கியமாக இலங்கை நாட்டிலே உள்ள எரிபொருள் தட்டுப்பாடு மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களை சொல்கின்றனர். அதேநேரம் கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே பொருளாதாரமாகவும், ஜீவனோபாயமாகவும் கொண்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்க மாகாணங்களில் நெற்செய்கை குறிப்பாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு செல்லுங்கள் என ஒரே இரவிலேயே இந்த அரசாங்கம் அறிவித்ததன் காரணமாக இம்முறை அறுவடை மிகப்பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.இதனால் ஏக்கருக்கு 50 மூடைகளை பெற்றுக்கொண்ட வயல் நிலங்களில் ஏக்கருக்கு 5, 7, 10 மூடைகளாகவே அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதனை அடுத்து இயற்கை உரத்துடன் சிறுபோக செய்கையை மேற்கொள்வதற்கு உழுது தயாரானபொழுது இங்கு டீசல் எனும் எரிபொருள் தடையாக இருக்கின்றது.அரசாங்கத்திடமிருந்து அவர்களிற்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்யில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நற்பதை நாங்கள் பார்க்கின்றோம். இது அவர்களை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக விழுந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்த அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது. அந்தவகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள், கோட்டபாயவின் நடவடிக்கைகள் தமது பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் சோகமான கதைகளை சொல்கின்றார்கள்.தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்றபொழுதிலும், இங்கு தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ளவோ அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களிற்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது.குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது.சர்வதேச நாணய நிதியம் மற்றம் உலக வங்கிகளுடன் தாங்கள் பேசிக்கொண்டிருப்பதாகவும் நிதியமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றார். சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் பேசமாட்டோம் என்று அவர்கள் பல தடவை கூறியிருக்கின்றார்கள். இப்பொழுது அந்த நிலைமைக்க இறங்கி வந்திருப்பதுகூடஅவர்களது இயலாமையின் அடுத்தக்கட்ட வெளிப்பாட்டை கொண்டு வந்திருக்கின்றது.நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்ற இந்த நேரத்தில் அவர்களின் மீட்சிக்கு இந்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் தாமாக இந்த அரசியல் நிலைமையை விட்டு விலகி மக்களின் வாழ்க்கைக்கான சரியான அரசை அமைத்துக்கொள்வதற்கும், ஒரு தீர்வை பெற்றுக்கொள்வதற்கும் இந்த அரசு வழியை திறந்து விட வேண்டும் என்றுதான் அனைத்து மக்களும் விரும்புகின்றார்கள்.

  • 548
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads