
இயற்கை உரங்களை பயன்படுத்துவதனால் நிறையவே நன்மைகள்- மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்
பயிர் செய்கைகளின் போது இயற்கை உரங்களை பயன்படுத்துவதனால் நிறையவே நன்மைகள் உள்ளன இது தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வுகள் அவசியமாகும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(28-02-2022) நடைபெற்றமாவட்ட விவசாய குழுக்கட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கிராம மட்டங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மத்தியில் இயற்கை உரப் பயன்பாடுகள் தொடர்பிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பிலும் மேலதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.இயற்கை உர பாவனையால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை இராசாயன உரங்களால் புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன இதற்கான மருத்துவ தேவைகளை அரசாங்கமே செய்ய வேண்டிய வேண்டியுள்ளதுஇது நமது நாட்டினுடைய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்இயற்கை உர பயன்பாடு என்பது ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவே குறிப்பிடப்படுகின்றதுஇதனால் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நன்மைகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் மாற்றங்களை கொண்டு வரும்போது கஷ்டங்கள் இருக்கலாம் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை உணர வேண்டும் கடந்த போகத்தில் சேதனப் பசளைகள் பயன்படுத்துவதற்கு உரிய காலத்தில் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது கால தாமதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு இல்லாமல் முன்கூட்டியே சேதனப் பசளை பயன்படுத்தி உரிய காலத்துக்கு பயயிர்செய்கைகளை மேற்கொள்ளும் போது ஒரு மாற்றத்தை நோக்கி முன்னேறலாம் என்பது ஆகவே அதனை பயன்படுத்துவதற்கு அனைவரும் முன் வர வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று பகல் 11மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) திருலிங்கநாதன் மற்றும மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்கள் உத்தியோகத்தர்கள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் கலந்து கொண்டனர்