
ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்தியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இன்று பிற்பகல் சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் சம்பவத்தை பார்வையிட்டுவிட்டு உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளார் .இதேவேளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் சம்பவ இடத்தில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளார்.குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டது வவுனியா நகரத்தச் சேர்ந்த கந்தையா நவ சீலன் வயது 45 என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தொழில் நிமித்தம் சம்பவிடத்திற்கு அருகில் உள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் அறியமுடிகின்றது.