Ads
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாலியாற்றில் இடம்பெறும் மண் அரிப்பை தடுக்கும்வகையில் ஆற்றுக்கு குறுக்காக தடுப்புச்சுவர்களை அமைக்குமாறு விவசாயிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தின் கீழ் உள்ள பாலியாறு முன்பு ஆழம் குறைந்த ஒரு ஆறாகவே காணப்பட்டது என்றும் தற்போது மண் அரிப்பை காரணமாக ஆற்றின் ஆழம் ஐம்பது அடியையும் தாண்டி விட்டது என்றும் காலப்போக்கில் இவ்வாறு அரிப்பு ஏற்பட்டு மேலும் ஆழமாகக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் அதற்கான தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்குறித்த ஆற்றுக்கு குறுக்காக தடுப்பு சுவர்களை அமைக்கப்படுவதற்கான போதிய நிதிமூலங்கள் தங்களிடம் இல்லை எனவும் நிதி கிடைக்கும் பட்சத்தில் மேற்படி வேலைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads