தமிழகத்தில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1146 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 43ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 157 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும், ஈரோட்டில் 55 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.
இன்று ஒரே நாளில் 3,561 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,977 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,164 ஆக குறைந்துள்ளது.