
போதிய உரவகைகள் இன்மை களை நாசினிகள் இன்மை காரணமாக கடந்த காலங்களில் அறுவடைகள் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்திகளை விட குறைந்த அளவு விளைச்சல்களே கிடைத்துள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு கால போக அறுவடையில் கெக்ரேயர் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைத்துள்ளாதாக மாவட்ட பிரதி மாகான விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுளளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் மானாவாரி பயிர்செய்கை நிலங்கள் உள்ளடங்கலாக சுமார் 69ஆயிரம் ஏக்கர் முதல் 70 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த காலங்களில் அறுவடைகள் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்திகளை விட இந்த முறை குறைந்த அளவு விளைச்சல்களே கிடைத்துள்ளன என்றும் இதனால் பாரிய நட்டத்தினை எதிர் கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
போதிய உரவகைகள் இன்மை களை நாசினிகள் இன்மை காரணமாக சில இடங்களில் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இரசாயன உரங்களை தடுத்து நிறுத்தி சேதனப் பசளை பயன்படுத்தி விவசாயத்ததை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் உரத் தட்டுப்பாடு மற்றும் கிருமி நாசினிகள் களை நாசினிகள் தட்டுப்பாடு காரணமாக குறித்த விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயிகள் தெரிவித்தள்ளனர்.
மாவட்டத்தில் அறுவடைகள் நிறைவு பெற்று வரும் நிலையில் இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த போகங்களில் ஹெக்டேர் ஒன்றுக்கு 4.3 மெற்றிக் தொன் முதல் 4.5 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைத்திருந்தன.இந்தப் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளன. அதாவது கெக்ரேயர் ஒன்றுக்கு 2.5 மெற்றிக் தொன் முதல் 3 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் மாத்திரமே கிடைத்துள்ளதாக மாவட்ட பிரதி மாகான விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுளளது.