Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள மருதன் குளம் கடந்த 2019 ஆம் ஆண்டில் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக குளத்தின் நீர்வரத்து அதிகரித்து குளத்தின் வான் பகுதியில் உடைப்பெடுத்தமையால் குளத்தின் நீர் முழுமையாக வெளியேறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித புனரமைப்புக்களுமின்றி காணப்பட்டது.
இதனால் விவசாயச் செய்கை மற்றும் நன்னீர் மீன் பிடியென்பன பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. தற்போது குறித்த குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் பலரும் நன்மை அடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.குறித்த குளத்தின் கீழ் 400 ஏக்கர் நிலப்பரப்பில் கால போக செய்கையும் ஏறத்தாழ 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.