Ads
கன்னட கவிஞர் டாக்டர் சன்னவீர் கணவி மறைந்தார்
கன்னட கவி மற்றும் எழுத்தாளர், டாக்டர் சன்னவீர் கணவி (93) அவர்கள் தார்வாடா எஸ்.டி.எம். மருத்துவமனையில், ஜனவரி 14 முதல் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 28 ஜீன் 1928 ல் பிறந்தார். இவரின் ஜீவதாவணி என்ற புகழ்பெற்ற கவிதைக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார். கன்னட அரசின் உயர்ந்த விருதான ராஜோஷ்தவ விருது, பம்பா விருது பெற்றுள்ளார்.
இவருடைய இறுதி சடங்கு பேடகேரியில் உள்ள அவரது பாரம் ஹவுஸ்சில் அரசு மரியாதையுடன் இன்று மாலை அடக்கம் செய்தனர். மாவட்ட ஆ ட்சியர் நித்திஷ், டி.சி.பி லாபுராம், அரசியல் பிரமுகர்கள் என பலர் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
Info
Ads
Latest News
Ads