
அக்கராயன் ஆற்றுப் பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு
கிளிநொச்சி அக்கராயன் ஆறு மற்றும் அதன் சூழல் பகுதிகளை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆற்றுப் பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் மாவட்டத்தின் தேவைகளுக்குப் பயன் படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜனாதிபதியின் நாட்டை கட்டி எழுப்புதல் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின அடிப்படையில் உருவான இலங்கையில் உள்ள 103 ஆறுகளை பாதுகாக்கும் தேசிய சுற்றாடல் கருத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான ஆறுகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற அக்கராயன் ஆற்றினையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுஇந்தநிலையில் அக்கராயன் ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோட கூடியவகையில் ஆற்றில் இருந்து அகற்றப்பட்ட பெருந்தொகையான மணல் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டவுள்ளதாகவும் இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை பிரதேச சபையின் ஊடாக வழங்கப்படுவதாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதும் தற்போது குறித்த மணலை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமானத்தேவைகளுக்கு மணலை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இவ்வாறு பெருந்தொகையான மணல் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.