
புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா
கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் இன்று (15-02-2022) மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) தலைமையில் பகல் 10-மணிக்கு ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் மார்ச் மாதம் 18 ம்திகதி நடைபெறவுள்ளது.இபபொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருலிங்கநாதன் (காணி) தலைமயில் இன்று (15-02-2022) பகல் நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி (பதில் ) பிரியநந்தினி கமலசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளைப் பின்பற்றி இம்முறை பொங்கல் உற்சவத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளது.அத்துடன் ஆலய சூழலை துப்பரவு செய்தல் வீதிகளை செப்பனிடுதல், குடிநீர் விநியோகம்; போக்குவரத்துச்சேவை, பாதுகாப்புச்சேவை, மின்சார வசதி கழிவகற்றல் வர்த்தக நிலையங்களை ஏலமிடுதல், வைத்திய முதலுதவி சேவைகள், தாகசாந்தி நிலையங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதில் ஆலயத்தொண்டர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலர் கலந்துகொண்டனர்.