
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இரண்டு புதிய கமநல அபிவிருத்தி நிலையங்கள் பரந்தன் மற்றும் முரசு மோட்டை ஆகிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முழங்காவில் பூனகரி அக்கராயன் உருத்திரபுரம் கிளிநொச்சி இராமநாத புரம் பளை புளியம் பொக்கணை ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்ற கமநல அபிவிருத்தி நிலையங்களைவிட மேலதிகமாக இரண்டு கமநல அபிவிருத்தி நிலையங்களும் இம் மாத முற்பகுதியில் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளன.மேற்படி இரு கமநல அபிவிருத்தி நிலையங்களும் கிளிநொச்சி கமநல அபிவிருத்தி நிலையத்தில் இருந்தும் புளியம் பொக்கனை கம நல அபிவிருத்தி நிலையத்தில் இருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட பயிற் செய்கை நிலங்களையும் விவசாய அமைப்புக்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.அதாவது பரந்தன் கமநல அபிவிருத்தி நிலையத்தின் கீழ்மானாவாரி பயனாளிகள்பரந்தன்நகர் 790 ஏ 200கோரக்கன் கட்டு 2550ஏ 382உமயாள்புரம் 1482ஏ 415தட்டுவன்கொட்டி 2339ஏ 425குமரபுரம் 1360ஏ 420-------- ------8521ஏ 1842கண்டாவளை கண்டாவளை கமநல அபிவிருத்தி நிலையத்தின் கீழ்நீ.பா மா பயனாளிகள்கண்டாவளை 3100ஏ 3000ஏ 1412முரசுமோட்டை 850ஏ 800ஏ 465புலிகதேவன் 1650ஏ 850ஏ 450முறிம்புஊரியின் 1200ஏ 300ஏ 415--------- -------- ------6800ஏ 2250ஏ 274 2 என்ற அடிப்படையில் மேற்படி கமநல சேவை நிலையங்களை உருவாக்குவதற்காக 2013ம் ஆண்டு முதல் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அழுத்கமகே மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த வேளையில் முன்வைக்கப்பட்ட இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து இவ் இரண்டு புதிய கமநல அபிவிருத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது